What's Your Story?
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ
1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ Icon_minitimeMon Jun 24, 2019 7:02 am by Arun

» கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ
1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ Icon_minitimeMon Jun 24, 2019 6:50 am by Arun

» Site Revival?
1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ Icon_minitimeThu Mar 10, 2016 4:12 am by Jalios

» > Yøung Vølcanøes <
1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ Icon_minitimeWed May 27, 2015 10:03 pm by Taylor

» :.:Gone:.:
1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ Icon_minitimeSat May 23, 2015 1:17 pm by Taylor

» WYS Code of Conduct
1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ Icon_minitimeSat May 16, 2015 2:36 pm by Taylor

» -- for me to know --
1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ Icon_minitimeTue Mar 03, 2015 2:07 pm by Taylor

» "Martians Unite!"
1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ Icon_minitimeMon Mar 02, 2015 8:06 am by Jalios

» horrible songs
1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ Icon_minitimeTue Feb 17, 2015 6:52 pm by Jess

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 83 on Wed Jul 03, 2019 12:46 am
Top posting users this week
No user

Top posting users this month
No user

TIMEZONES
Pacific Time
Eastern Standard Time
Mountain Time
Central Time
United Kingdom
Atlantic Time
Hawaiian Time
Australian Time
Flag Counter
free web site traffic and promotion

1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ

Go down

20190624

Post 

1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ Empty 1-கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ




கண்கள் சொருக உதடுகள் விம்ம தலையில் போட்டிருந்த கட்டு பிரிந்து ரெத்தம் வழிந்தோட துடிப்புகள் குறைய கைகள் படபடக்க மகிழ் இனி மகி உன்னோட பொறுப்பு அவளுக்கு நல்ல வாழ்க்கை உன்னால மட்டும் தான் அமைச்சு தர முடியும் என கூறி டேய் மகிழ் எனக்கு ஒரு சத்யம் பண்ணி கொடு எந்த காரணத்துக்காகவும் மகி என்னைக்கும் கலங்காமல் வாழ வைப்பேன்னு என சத்யம் கேட்க... டேய் மாறா ஏன்டா இப்படிலாம் பேசுற உனக்கு ஒன்னும் ஆகாதுடா இப்படிலாம் பேசாதே என கூறி மகிழும் கண்ணீர் சிந்த டேய் மகிழ் சத்யம் செய் என் வாழ்க்கை அவ்ளோதான் முடுஞ்சுடுச்சு என கூற தான் உடன்பிறப்பு மாறன் உயிர் விண்ணுலகை நோக்கி மறைய மண்ணுலகில் ஒரு ஜீவனை கண்டிப்பாக நல்ல படியா ஒரு வாழ்க்கை அமைத்து கொடுக்கிறேன் என அவனது கைகளில் தனது கரங்களை சேர்த்தான் மகிழின்பன்...

தனது உடன்பிறப்பு செய்த சத்யம் அந்த அரிச்சந்திரன் வாக்கு போல என மலை போல நம்பிக்கை வைத்து இனி எல்லாம் அவன் பொறுப்பு என்ற தயிரியத்தில் துடிப்பு இரு மடங்கு எகிற உயிர் உடலைவிட்டு பிரிந்து போக தன் தம்பியின் கண்களை பார்த்தவண்ணம் இருக்க மாறா என்று மகிழ் அலற அந்த அறையில் அந்த குடும்பத்தினர் கதறி அழ மருத்துவர்கள் எல்லாம் முடிந்தது என்று அவனது உடலில் வெள்ளை துணி ஒன்று போத்தி உடலை போஸ்ட்மாடெம் என்ற பெயரில் கூறுபோட எடுத்து செல்ல எதுவும் செய்ய முடியா கையலகதவனாய் அந்த ஆண்மகன் கதறி கொண்டிருந்தான்...

இங்கு தன் கணவன் உயிர் பிரிந்து இம்மண்ணுலகை விட்டு மறைந்தது கூட அறியாமல் தன் சுயநினைவு இழந்து ஒரு தனி அறையில் ஏதும் அறியாவண்ணம் உறக்கம் என்று தெளியும் என்று கூட அறியாமல் அந்த கட்டிலில் யாரும் அற்றவள் போல் படுத்திருந்தாள் மகிழினி...

மருத்துவமனையின் எல்லா வேலைகளும் முடிய மாறனின் உடல் அவனது இல்லம் எடுத்து செல்ல அந்த இக்கட்டிலும் அந்த மருத்துவனை ஊழியரிடம் மகிழினிக்கு தனி நர்ஸ் ஒருவரை நியமித்து நன்றாக பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு தனது அண்ணனின் இறுதிச்சடங்குகளை செய்ய சென்றான் மகிழன்.. ..

திருமணத்துக்கு போட்ட பந்தகாலின் சந்தனம் உதிரும் முன் அதில் வைத்து கட்டிய மாங்கொத்துகள் இலைகள் சருகாகும் முன் மனதில் சேமித்து வைத்த ஆசைகள் அனைத்தும் சேர்த்து தன்னவளுக்காக ஊர் கூடி கட்டிய மஞ்சள் கயிறு ஈரம் காயும் முன் உயிர் உடலைவிட்டு பிரிந்து சென்று மண்ணுக்குள் புதைவதை வீட்டார் மட்டுமின்றி அந்த ஊர்மக்களும் திருமணத்துக்கு போட்ட பந்தல் இன்று அவனது இறுதிச்சடங்குக்கு அமைந்ததை நினைத்து கலங்கி கண்ணீர் வடித்தனர்...

எல்லாம் முடிந்து எல்லாரும் கவலையில் மூழ்கிக்கிடக்க மாறன் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி மகிழினி வீட்டாரும் மறந்து தான் போயினர் அங்கு மகிழ் உணர்வின்றி உயிரோடு இருப்பதை... பின் தான் மட்டும் தான் எல்லாம் பார்த்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்ற மகிழ் மருத்துவமனை விரைந்தான்.....

மருத்துவமனையில் மகிழை பார்த்து கொண்ட நர்ஸ்க்கு நன்றி கூறி விட்டு உள்ளே சென்று அவளை பார்த்து அமர்ந்திருந்தவனின் மனதில் இதற்கு முன் தன் குடும்பம் எப்படி இருந்தது என்று நினைக்க தொடங்கினான்...

டேய் மகிழ் நாளைக்கு வீட்டுக்கு வா உன் அண்ணனுக்கு இன்னும் ரெண்டு நாள்க்கு அப்பறம் நிச்சயதார்த்தம் என தந்தை கூற என்னப்பா பொண்ணு பார்குறதா சொன்னிங்க இப்போ திடீருனு நிச்சயம்னு சொல்றிங்க என கேட்க.... இல்லப்பா ஒரு நல்ல வரன் வந்தது பொண்ணு வீட்லயும் சம்மதம் சொல்ட்டாங்க ஜாதகமும் பொருந்தி வந்துச்சு அதான் உடனே முடுச்சுடலாம்னு என கூற...

சரிப்பா ஆனால் எனக்கு முக்கியமான வேலை இருக்கு நிச்சயத்துக்கு நான் இல்லைனா என்ன கல்யாணத்துக்கு ஒருவாரம் விடுப்பு எடுத்துவரேன் என கூற உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் சரிப்பா வேலை இருந்தால் அதை பாரு என தந்தை கூற... பின் அனைவரிடமும் பேசிவிட்டு அவனது வேளையில் கவனம் செலுத்த தொடங்கினான்...

பின் வேலை முடிந்து வந்ததும் முதல் வேலையாக தனது தமயனுக்கு போன் செய்து அவனை கலாய்க்க.. .. டேய் மகிழ் நீ லீவ் எடுக்க முடியாதா அப்பா நீ வரலன்னு சொன்னாங்க என மாறன் வருத்தப்பட.... டேய் டேய் மாறா போதும் பொண்ணு உனக்கு பார்த்துருக்காங்க எனக்கு இல்லை நான் வந்து பார்க்க என கூற உடன்பிறப்புகள் இருவரும் சில பல பேசிவிட்டு வைத்தனர்...

மகிழன் இருபத்தி ஐந்து வயது ஆண்மகன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு நல்ல பெயர் போன ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்பவன்... பார்ப்போரை எளிதில் மயக்கும் வசீகரமான புன்னகை... அளவோடு பேசும் குணம் ஆனாலும் அனைவரையும் எளிதில் ஈர்க்க கூடிய அமைதியான முகம் தெளிவாக முடிவெடுக்கும் பொறுமை.... கருப்பு என்பது என் தமிழ்நாட்டு நிறம் என்பது போல் கலையான கருத்த முகம் ஆறடிக்கு சற்று குறைவான உயரம்... இன்றைய இளைஞர்கள் வைத்திருக்கும் சிக்ஸ்பேக் இல்லையென்றாலும் வீரமான தேகம் மொத்தத்தில் கர்வமில்லா ஆண்மகன்...

குடும்பம் மட்டுமே அவனின் பலமும் பலவீனமும்.... ஒரு முடிவெடுக்க பலமுறை யோசிப்பவன் முடிவு எடுத்தபின் ஒருநாளும் அதை பின்வாங்காதவன்... விளையாட்டுக்கும் பொய் பேசினால் புடிக்காது.. சொன்ன சொல் காப்பாற்ற நினைப்பவன்...

தந்தை சிவராமன் தாய் பரிமளா... அண்ணன் மாறன் பாட்டி கிருஷ்ணவேணி தாத்தா கல்யாணசுந்தரம் அழகான குடும்பம் மாறனுக்கும் மகிழ்க்கும் ஒருவருடம் மட்டுமே இடைவெளி அதனால் இருவரும் உடன்பிறப்பு என்ற பிணைப்பையும் தாண்டி நல்ல நண்பர்களாய் இருந்தனர்.. தன் வீட்டுக்கு ஒரு புது வரவாய் ஒரு நபர் வரவிருப்பதை நினைத்து மகிழ்வுடன் சுற்றிவந்தான் நண்பர்கள் அனைவரிடத்திலும் பகிர்ந்து கொண்டான்...

திருமணத்துக்கு ஒருவாரம் முன்பே விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்தான்... அண்ணனுக்கு பார்த்திருக்கும் பெண்ணை பார்க்கும் அவளோடு போக அங்கே மாறன் அலைபேசியில் மகியோடு கடலை போட்டு கொண்டிருக்க சட்டென அவனது அலைபேசியை பறித்து மகியோடு இவன் பேச திடீரென வேறொருவர் பேச மகிழினி ஒன்றும் பேசவில்லை...

ஹலோ ஹலோ ரொம்ப பயப்படாதீங்க மேடம் நான் மகிழன் மாறன் தம்பி என கூற. ஹே மகி பேசமாட்டீங்களா என கேட்க அது ஒண்ணுமில்ல எ.. எ . எனக்கு நி .. நீ.. நீங்க இல்லை அவருக்குக்கிட்ட போன் கொடுங்க என மகி தடுமாற... ஓகே ஓகே கூல் அவன் கிட்ட கொடுக்குறேன் என கூற...

டேய் மகிழ் என்னடா மகிய அண்ணி சொல்லு என மாறன் அதட்ட... போட டேய் போட எனக்கு அப்படி கூப்பிட வரல நான் பேர் சொல்லி தான் கூப்பிடுவேன் என மறுத்துவிட்டான்...

பின் திருமணம் இனிதே நடந்தேற மகிழினிக்கு ஏனோ மகிழ்லின் ஆகுபஜுவானா தேகத்தை கண்டு பயம் தான் இருந்தது...

மகிழினி எல்லா பெண்களும் போல வீட்டில் சொல்வதையே எடுத்து படிக்க எண்ணி இன்ஜினியரிங் முடித்துவிட்டு பெற்றோர்கள் வேளைக்கு போக வேண்டாம் என கூற அதையும் சரியென்று ஏற்றுக்கொண்டு வீட்டில் இருக்க திடீரென பெற்றோர்கள் ஒருநாள் ஒரு புகைப்படத்தை காண்பித்து உனக்கு பார்த்திருக்கும் மாப்பிளை என கூற எப்போதும் போல இப்போதும் சரியென்று சொல்ல..

பெற்றோர்கள் தன் மகளை எண்ணி மனம் மகிழ்ந்து அவளிடம் ஒரு கவர் கொடுத்துவிட்டு சென்றனர்... அதில் உள்ள புகைப்படத்தை பார்த்தவள் அவனது சிரிப்பிலே அவன்மீது காதல் கொண்டாள்... போட்டோ பின்புறம் அவனை பற்றி எழுதிருக்க மாறன் என்ற பெயரை அழகாய் உச்சரித்து அகம் குளிர உதட்டில் புன்னகையும் முகத்தில் வெட்கமும் வர புகைப்படத்தை பார்த்து கொண்டிருக்க பின்னால் மொபைல் நம்பர் எழுதிருக்க கால் செய்வோமா வேணாமா என யோசித்துவிட்டு பின் அவனே செய்யட்டும் என்று அதை விட்டுவிட்டால்.. ...

பின் நிச்சயம் முடிந்து இருவரும் ஏதோ வருடங்கள் கடந்த கரம் பிடிக்க போகும் காதலர்கள் போல கல்யாண கனவில் மிதந்தனர்... திருமணம் முடிந்து மறுநாள் கோவிலுக்கு போய் வர சொல்ல இருவரும் பைக்கில் கிளம்ப புதுமண தம்பதிகளாக சென்றவர்கள் இன்று ஒரு கோரவிபத்தில் வாழ்க்கை இப்படி போனதை எண்ணி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தான் மகிழன்..

இனி இந்த அழகான குடும்பத்தை எவ்வாறு பார்க்க போறோம் அதிலும் தன் தமயன் இல்லாத குறையை எப்படி தீர்க்க போகிறோம் அதனினும் மகிழினி அவளை எப்படி என்ன செய்ய போகிறோம் என்று யோசிக்கையில் மனம் கனத்துப்போனது..

இப்படியே ஒரு மாதம் கடந்த நிலையில் மகிழினி சுயநினைவு பெற மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு எல்லாம் நார்மல் என்று கூற மகிழ் அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்ய...

மகிழினி தயங்கி தயங்கி... அவரு எங்க என கேட்க அவள் கேட்பதை கவனிக்காதவன் போல ஒன்றும் பேசாமல் அங்கிருந்த பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தான்... இருவீட்டாரிடமும் தானே அழைத்து வருவதாய் கூறிவிட்டான்.. நீங்கள் எல்லாரும் வந்தால் அவங்க அண்ணா எங்கன்னு கேட்க நீங்க அங்கே ஒளறிடுவீங்க என கூறி யாரையும் அவன் அனுமதிக்கவில்லை..

உங்ககிட்ட தான் கேட்குறேன் அவரு எங்க நல்லா இருக்காருல என மீண்டும் கேட்க... ஹான் நல்லா இருக்கான் வீட்ல போய் பேசிக்கலாம் என கடுமையாக கூற அதற்கு மேல் அவள் ஒன்றும் கேட்கவில்லை..

அவள் எழுந்து நடக்க உதவி செய்து அவளை கை தாங்கலாய் அழைத்து வர மகிழ் அவன் அருகில் இருக்கவும் கொஞ்சம் சங்கடமாய் இருக்க இருந்தாலும் அவளுக்கு இப்போது துணை இன்றி நடக்க முடியாது என்றும் அவனின் அருகாமையை ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு செல்ல...

வீட்டில் சென்று இறங்க அங்கு வீடே மயான அமைதியாய் இருக்க மகி மனம் ரொம்ப உதற தொடங்கியது வீட்டிற்குள் நுழைய மகி தாயார் அவளை கட்டிக்கொண்டு கதறி அழ நடப்பது எதுவும் புரியாமல் அம்மா அவரு எங்க நீங்க எல்லாரும் இருக்கீங்க அவர மட்டும் காணோம் என கேட்க மற்ற அனைவரும் மீண்டும் கதற தொடங்கினர்...

அவள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அனைவரும் திணற பாட்டி கிருஷ்ணவேணி தான் அடியே என் வீட்டுக்கு வந்த ராசாத்திய வாழ வைக்காம அவன் போய் சேர்ந்துடான் இத எப்படி டி ராசாத்தி உங்கிட்ட நாங்கல்லாம் சொல்லுவோம் என மேலும் கதறி ஒரு திசையை காட்ட.

அவர்கள் பேசியது மூளையில் பதிவதற்கு முன் அந்த திசையை பார்த்தவள் அப்படியே நின்றாள் அங்கு மாறனின் புகைபடம் வைத்து அதற்கு முன் ஒருவிளக்கு எரிந்து கொண்டு இருக்க அவன் புகைப்படத்திற்கு மாலை போட்டு இருக்க அதை கண்டவள் அப்படியே மயங்கி சரிந்தாள்....
Arun
Arun

Posts : 2
Join date : 2019-06-24

Back to top Go down

Share this post on: reddit
- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum